Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
மசாலா மிர்ச்சி
மிளகாயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையான மிளகாய் தான் நீளமான பச்சை மிளகாய். பொதுவாக அந்த பச்சை மிளகாய் கொண்டு பஜ்ஜி தான் போடுவோம். ஆனால் அந்த பச்சை மிளகாயைக் கொண்டு சூப்பரான முறையில் மசாலா செய்து, சாதம் அல்லது சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம்.
மேலும் இந்த பச்சை மிளகாய் காரம் இல்லாமல் இருப்பதால், இதனை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது இந்த மசாலா மிர்ச்சி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
நீளமான பச்சை மிளகாய் - 5-6
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
சிறிய பச்சை மிளகாய் - 2
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் நீளமான மற்றும் சிறிய பச்சை மிளகாயை 1 இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இரண்டாக கூட நறுக்கிக் கொள்ளலாம்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய்களை சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் பச்சை மிளகாய் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
மிளகாயானது நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, மிளகாயில் அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான மசாலா மிர்ச்சி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
