Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மசாலா சப்பாத்தி
சப்பாத்திகளிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மசாலா சப்பாத்தி என்னும் கார சப்பாத்தி. இந்த சப்பாத்தியானது மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்வதாகும். மேலும் சுவையாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம்.
இங்கு அந்த மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக இந்த சப்பாத்தியை சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் தண்ணீரைத் தவிர அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு மென்மையாக பிசைந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு அதனை உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மசாலா சப்பாத்தி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
