Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மசாலா பிரட் டோஸ்ட்
காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஒருவரின் உடலுக்கு தேவையான சக்தியானது, காலை உணவைப் பொறுத்து தான் உள்ளது. எனவே எந்த நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பெரும்பாலானோர், காலையில் எழுந்து சமைத்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சரியாக சாப்பிடாமல் செல்கின்றனர்.
அத்தகையவர்களுக்கு எளிதான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் பிரட்டை வைத்து ஈஸியான முறையில் ஒரு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். பொதுவாக பிரட்டை சாதாரணமாக டோஸ்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் அந்த பிரட்டுடன் முட்டையை சேர்த்து எப்படி ஒரு மசாலா பிரட் டோஸ்ட் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 6-8
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
முட்டை - 3
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தக்காள் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.
பின்பு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும தக்காளி சாஸ் சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், பிரட்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்ய வேண்டும்.
பின் செய்து வைத்துள்ள மசாலாவை டோஸ்ட் செய்த ஒரு பிட்டின் மேல் வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான மசாலா பிரட் டோஸ்ட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
