For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொங்குநாடு தால் ரெசிபி

By Maha
|

வாரம் ஒரு முறை உணவில் பருப்பை தவறாமல் சேர்க்க வேண்டுமென்று சொல்வார்கள். ஏனெனில் பருப்புக்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே பலர் பருப்பைக் கொண்டு சாம்பார் அல்லது கடைசல் செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் இங்கு கொங்குநாடு தால் ரெசிபியானது உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தால் ரெசிபியைப் படித்து பார்த்து, மதிய வேளையில் சாதத்திற்கு செய்து சாப்பிடுங்கள. பின் பாருங்கள், நீங்கள் அந்த தால் ரெசிபிக்கே அடிமையாகிவிடுவீர்கள். மேலும் இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். அந்த அளவில் இது மிகவும் ஈஸியானது. சரி, ரெசிபியைப் பார்ப்போமா!!!

Kongunadu Dal Recipe

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (தட்டியது)
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், எண்ணெய் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு குக்கரில் உள்ள பருப்பை லேசாக மசித்து பின் வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கொங்குநாடு தால் ரெசிபி ரெடி!!!

இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.

English summary

Kongunadu Dal Recipe

If you want to make a delicious side dish for rice, then try this kongunadu dal recipe. It is very easy that even bachelors also can try.
Story first published: Thursday, January 9, 2014, 11:54 [IST]
Desktop Bottom Promotion