Latest Updates
-
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா?
கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி
கரிசலாங்கண்ணிக் கீரையில் அளவுக்கு அதிகமாக சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பது நல்லது. குறிப்பாக இந்த கீரையை குழந்தைகள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை வராமல் இருப்பதுடன், குழந்தைகளுக்கு பல் வலி ஏற்படாமலும் இருக்கும்.
ஆனால் குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிப்பார்கள் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை கரிசலாங்கண்ணிக் கீரையை வைத்து அருமையான சுவையில் எப்படி சப்பாத்தி செய்வது என்று கொடுத்துள்ளது. அதை முயற்சித்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
கரிசலாங்கண்ணிக் கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/5 கப்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையின் இலைகளை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கீரையை போட்டு, சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்பு அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு, தயிர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பௌலில் அரைத்து வைத்துள்ள கீரை, கோதுமை மாவு, கடலை மாவு, சாம்பார் பவுடர், கரம் மசாலா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications