Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
பச்சை பட்டாணி கட்லெட்
உடலில் போலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்துக்களை அதிகரிக்க பச்சை பட்டாணி மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இத்தகைய உணவுப் பொருளில், இந்த இரண்டு சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே பச்சை பட்டாணியை வைத்து பலவாறு விருப்பமான முறையில் சமைத்து சாப்பிடலாம்.
ஒரு வேளை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம். இது சுவையான ருசியில் இருப்பதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 3/4 கப் (வேக வைத்து மசித்தது)
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பன்னீர் - 1/4 கப் (துருவியது)
தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்தால், பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
