Latest Updates
-
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் எப்படி அச்சடிக்கப்படுகிறது? எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? -
மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.. அலட்சியம் செய்யக்கூடாத 7 அறிகுறிகள்! -
தீபாவளிக்கு வழக்கமான முறுக்கு செய்யாம இந்த பச்சை மிளகாய் தயிர் முறுக்கை செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கி இருக்கணும்! -
இந்தியாவின் 'அரிசித் தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? தென்னிந்திய மாநிலம் எதுவும் இல்லையாம் -
இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 02, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது! -
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
பச்சை பயறு மிளகு மசாலா
உடல் ஆரோக்கியமாக இருக்க பயறு வகைகளை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் பச்சை பயறை சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும். அதுவும் பச்சை பயறு மிளகு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக இந்த பச்சை பயறு மிளகு மசாலா செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த பச்சை பயறு மிளகு மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பயறை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி அடுப்பல் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு குக்கரில் உள்ள பச்சை பயறை நீருடன் வாணலியில் ஊற்றி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து, உப்பு சுவை பார்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பச்சை பயறு மிளகு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
