For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெய் சாதம்

By Staff
|

தேவையான பொருட்கள்:

1 லிட்டர் புலவு அரிசி, 200 கிராம் நெய், 50 கிராம் வெங்காயம், 20 பச்சை மிளகாய், 1 மூடி தேங்காய், 1 கட்டுகொத்தமல்லி இலை, இரண்டு அக்ரூட், 4 பாதாம்பருப்பு, 10 பிஸ்தா பருப்பு, 2 தேக்கரண்டி கசகசா, 2 தேக்கரண்டிசாரப்பருப்பு, ஒரு ஜாதிக்காய், 1 துண்டு லவங்கப்பட்டை, 10 கிராம்பு, 10 ஏலக்காய், தேவையான அளவு உப்பு

செய்முறை:

தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கொத்துமல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சாரப் பருப்பு, அக்ரூட் பருப்பு,பிஸ்தா, கசகசா, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

பின்பு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி, காயவிட வேண்டும். அதில் கிராம்பு, ஏலம், பட்டை ஆகியவற்றை போட்டு,பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் அரைத்த சாமான்களைப் போட்டுக்கிளறி, அதில் தேங்காய்ப்பாலும் நீருமாக 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரிசியையும் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். முக்கால் வேக்காட்டில் இறக்கி வைத்தால், நெய் சாதம் ரெடி.

Story first published: Friday, July 25, 2008, 16:09 [IST]
Desktop Bottom Promotion