For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருப்பு சாதம்

தமிழ்நாடு ஸ்பெஷல் பருப்பு சாதம் செய்முறை குறித்த சமையல் குறிப்பு

By Staff
|

தேவையான பொருட்கள்:

அரைக்கிலோ அரிசி, கால் லிட்டர் துவரம் பருப்பு, தேவையான அளவு உப்பு, 4 மேஜைக்கரண்டி நெய், 125 மி.லி.எண்ணெய், 2 தேக்கரண்டி வெந்தயம், ஒரு கொத்து கறிவேப்பிலை, சிறு துண்டு பெருங்காயம், 2 மேஜைக்கரண்டிதனியா, ஒரு தேக்கரண்டி கடுகு, சிறு துண்டு தேங்காய், 8 பச்சை மிளகாய், 30 கிராம் முந்திரிப்பருப்பு, 20 வற்றல்மிளகாய், 50 கிராம் புளி, கொஞ்சம் கொத்தமல்லி, 2 தேக்கரண்டி மசாலா பொடி, 2 தேக்கரண்டி கசகசா, 8 கிராம்பு,கொஞ்சம் சோம்பு, 7 ஏலக்காய்.

செய்முறை:

மிளகாய், வெந்தயம், தனியா ஆகிவற்றை எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிபொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவையெல்லாவற்றையும் இடித்து பொடி செய்து கொள்ளவும்.பருப்பை அரை லிட்டர் நீரில் மஞ்சள் பொடி கலந்து வேகவிடவும்.

நன்றாக பருப்பு வெந்ததும் மூன்று லிட்டர் நீர் விடவும். அதனுடன் அரிசியைப் போட்டு வேகவிடவும். அரிசியும்பருப்பும் நன்றாக வெந்து பொங்கல் போல் வரும் சமயத்தில் புளியைக் கரைத்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் போடவும். கடுகு வெடிக்கும்போது அதை பருப்பு சாதத்துடன்கலந்து நன்றாகக் கிளறவும். பின்னர் சாதத்துடன் வறுத்துப் பொடித்த மிளகாய் வற்றல், வெந்தயம், மசாலாப் பொடி,தனியா ஆகியவற்றைப் போட்டு, மறுபடியும் சிறிது புளியைக் கரைத்து ஊற்றவும்.

கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த சாதத்தை சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் பருப்பு சாதம்கெட்டியாகி விடவும். பின்பு அதை எடுத்து பறிமாறலாம்.

English summary

Dhal rice making recipe

Dhal rice making recipe
Desktop Bottom Promotion