Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
தக்காளி ஊத்தாப்பம்
பொதுவாக தோசையை தான் பலர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் அந்த தோசையை சற்று தடிமனாக ஊற்றினால், அதனையே ஊத்தாப்பம் என்று சொல்வார்கள். பெரும்பாலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் இது தடிமனாக இருப்பதாலேயே. ஆனால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை பயன்படுத்தி, ஊத்தாப்பம் செய்து கொடுத்தால், அனைவருமே ஊத்தாப்பத்தை விரும்பி சாப்பிடுவர்.
இப்போது அவற்றில் ஒருவகையான தக்காளி ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இட்லி மாவு - 4 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (துருவியது)
பட்டாணி - 1/2 கப்
தக்காளி - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (நறுக்கியது)
இஞ்சி - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி மாவில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று, ஆனால் சற்று தடிமனாக ஊற்றி, அதன் மேல் நறுக்கிய காய்கறிகளை தூவி, எண்ணெய் ஊற்றி, பின் மூடி வைத்து மூட வேண்டும்.
2-3 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, மறுபக்கம் திருப்பி போட்டு 1 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி ஊத்தாப்பம் தயார்!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
