Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி
குளிர்காலத்தில் கீரைகள் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள். ஆகவே அந்த கீரையில் ஒன்றான வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இங்கு அந்த வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து அவற்றை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெடி!!!



Click it and Unblock the Notifications
