Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
மைதா தோசை
பெரும்பாலானோருக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய தோசைகளில் பல வகைகள் உள்ளன. அதில் பலருக்கு பிடித்த தோசையெனில், அது மசாலா தோசை தான். ஆனால் இந்த தோசையை எப்போதும் காலையில் எழுந்து விரைவில் செய்ய முடியாது. ஆனால் மைதா மாவைக் கொண்டு எளிமையான முறையில் தோசை செய்யலாம்.
இந்த தோசை மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். சரி, இப்போது அந்த மைதா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பச்சரிசி மாவு, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான மைதா தோசை ரெடி!!! இதனை மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications