Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கொங்கனி சாம்பார்
இந்தியாவில் நிறைய மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பிரபலமான ரெசிபிக்கள் இருக்கும். அத்தகையவற்றில் மஹாராஸ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா மூன்று பகுதியின் சுவையும் கலந்து செய்யப்படும் ஒரு ரெசிபி தான் கொங்கன் ரெசிபி.
இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் ரெசிபியில், கொங்கன் சாம்பார் மிகவும் பிரபலமானது. இது மற்ற சாம்பாரை விட வித்தியாசமான சுவையுடையது. சரி, இதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 4
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பீன்ஸ் - 8 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
அதே சமயம், மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வர மிளகாய், வெந்தயம், மல்லி, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் கடலைப் பருப்பு மற்றும் துருவிய தேங்காய் போட்டு 4-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனைக் குளிர வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, நறுக்கிய காய்கறிகளான தக்காளி, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு, 2 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் கறிவேப்பிலையைப் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கொங்கனி சாம்பார் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications
