Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பச்சை பயறு குழம்பு

இப்போது அந்த பச்சை பயறை வைத்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பயறை நீரில் போட்டு, 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை கழுவிப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
புளியை 2 கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை கரைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை லேசாக மசித்துப் போட்டு, மீண்டும் 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
