Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
தயிர் சேமியா

தேவையான பொருட்கள்:
சேமியா - 2 கப்
தயிர் - 3 கப்
தண்ணீர் - 1 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சர்க்கரை - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கொதி விட்டு, சேமியாவை போட்டு வேக வைக்க வேண்டும்.
சேமியா வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் அலசி, அந்த நீரை வடிகட்டிவிட்டு, சேமியாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிரில் ஊற்ற வேண்டும்.
பின் மிக்ஸியில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து, அரைத்து, தயிரில் போட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள சேமியாவையும் தயிரில் போட்டு, கிளற விட வேண்டும்.
இப்போது சுவையான தயிர் சேமியா ரெடி!!! இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications