Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
காலிஃப்ளவர் புலாவ்
குளிர்காலத்தில் காலிஃப்ளவர் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள் என்பதால், இந்த காலிஃப்ளவரைக் கொண்டு எப்படி அருமையான சுவையில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து புலாவ் செய்வதென்று கொடுத்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியில் காலிஃப்ளவருடன், பச்சை பட்டாணி சேர்த்து செய்துள்ளோம். இவை இரண்டுமே குளிர்கால சீசன் காய்கறிகளாகும்.
மேலும் இவை இரண்டிலுமே எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றைக் கொண்டு காலையில் புலாவ் செய்தால், மதியம் அலுவலகம் அல்லது பள்ளியில் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது அந்த காலிஃப்ளவர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பிறகு பாசுமதி அரிசியைப் போட்டு 2-3 நிமிடம் கிளறி, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications