Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
குடைமிளகாய் மேகி
பொதுவாக மேகி செய்வது என்பது மிகவும் எளிது. அத்தகைய மேகியில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் விருப்பத்திற்கேற்றவையே. அதில் ஒன்று தான் வைட்டமின் சி அதிகம் உள்ள குடைமிளகாயை சேர்த்து செய்யப்படும் மேகி. இந்த மேகியை காலை வேளையில் அவசரத்திற்கு செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.
இப்போது அந்த குடைமிளகாய் மேகியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
மேகி - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மேகி பொடி - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 டம்ளர்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 5 நிமிடம் வதக்க விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மேகி பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட வேண்டும்.
பின்பு மேகியை உடைத்து அதில் சேர்த்து கிளறி விட்டு, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சூப்பரான குடைமிளகாய் மேகி ரெடி!!!



Click it and Unblock the Notifications
