Latest Updates
-
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா?
சுரைக்காய் கோப்தா
கோப்தா வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். கோப்தா என்பது வடை, பஜ்ஜி போன்று, எண்ணெயில் பொரித்து எடுக்கும் ஒரு வகையான ஸ்நாக்ஸ் தான். இந்த கோப்தாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பன்னீர் கோப்தா, வெஜிடேபிள் கோப்தா, கீரை கோப்தா, சோயா கோப்தா என்பன. இப்போது அந்த வகையான கோப்தாவில் ஒன்று தான் சுரைக்காயை வைத்து செய்யப்படும் கோப்தா. கோப்தாவை குழம்பு போன்றும் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது அவற்றை ஸ்நாக்ஸாகவும் செய்து சாப்பிடலாம்.
அதிலும் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அதனை வைத்து வித்தியாசமாக கோப்தா செய்து சாப்பிடலாம். இப்போது அந்த சுரைக்காயை வைத்து செய்யப்படும் கோப்தாவை படிப்படியாக எப்படி செய்வதென்று படங்களுடன் தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 500 கிராம்
கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1 கொத்து
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

படி: 1
முதலில் சுரைக்காயை நன்கு கழுவி, அதன் தோலை சீவி, துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 2
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

படி: 3
கொத்தமல்லியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

படி: 4
பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

படி: 5
பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய், கடலை மாவு கலவை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

படி: 6
பிறகு அதனை வடை பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து, எலுமிச்சை அளவில் உருட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 7
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

படி: 8
இதேப் போன்று அனைத்து கலவையையும் பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 9
இதோ சுவையான கோப்தா ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
