Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
மிளகு அடை
காலை வேளையில் நன்கு காரமாகவும், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ரெசிபியை சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மிளகு அடையை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த அடையை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.
இங்கு அந்த மிளகு அடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு, அத்துடன், மிளகு, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, பின் அரைத்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, அதன் மேல் சிறிது தேங்காய் துண்டுகளை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மிளகு அடை ரெடி!!!



Click it and Unblock the Notifications
