Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்
பெரும்பாலான வீடுகளில் திங்கட்கிழமை வந்தாலே, காலையில் என்ன செய்வதென்ற குழப்பமானது ஏற்படும். அந்த நேரத்தில் தமிழ் போல்டு ஸ்கையை திறந்து பாருங்கள். ஏனெனில் உங்களுக்காக எளிமையான சில காலை உணவுகளை கொடுத்திருப்போம். அதைப் படித்து எளிய முறையில் வீட்டில் செய்து மகிழுங்கள்.
அதிலும் அத்தகைய ரெசிபிக்கள் அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். இப்போது அதில் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்திக்கு...
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்க இறக்க வேண்டும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக தேய்த்து நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து, அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் ரெடி!!!
குறிப்பு:
இரவில் சப்பாத்தி செய்து எஞ்சியிருந்தால், வேண்டுமெனில் காலையில் அதனைக் கொண்டும் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்யலாம்.



Click it and Unblock the Notifications

