Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ஆலு கோபி மசாலா
வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யலாம். அதிலும் இந்த மசாலா மிகவும் காரசாரமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஆலு கோபி மசாலாவானது பேச்சுலர்கள் செய்யக்கூடியவாறும் இருக்கும்.
இப்போது அந்த ஆலு கோபி மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போன்று நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் குளிர்ந்த நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்த்து, காய்கறிகளில் மசாலா நன்கு சேரும் வரை, சுமார் 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் தண்ணீர் ஊற்றி, தட்டு கொண்டு மூடி வைத்து, குறைவான தீயிலேயே 7-8 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஆலு கோபி மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
