Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
காரமான அடை தோசை
தென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. அதிலும் தோசையில் ஒன்றான அடை தோசை தமிழ் நாட்டில மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தோசையின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பருப்புக்களை, அரிசியுடன் சேர்த்து அரைத்து, தோசைகளாக விடுவது தான்.
மேலும் அடை தோசை மிகவும் காரமான ஒரு ரெசிபி. அந்த அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
கொண்டைக்கடலை - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/3 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/3 கப்
வரமிளகாய் - 3-4
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் இட்லி அரிசியை இரவில் படுக்கும் முன், நீரில் ஊற வைத்து விட வேண்டும். அதேப் போல் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றையும் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் காலையில் எழுந்து ஊற வைத்துள்ள அனைத்து பருப்புக்களையும் நன்கு நைஸாக அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்
பிறகு கிரைண்டரில் ஊற வைத்துள்ள அரிசியை கழுவிப் போட்டு, வரமிளகாய், துருவிய தேங்காய், சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள பருப்புடன், இந்த தோசை மாவு, ரவை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலந்து, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி, 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மாவை, தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் காரமான அடை தோசை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
