Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
காலை உணவு உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் காலை உணவானது நீண்ட இடைவெளிக்குப் பின் உண்பதால், உடலில் அன்றைய நாளுக்கு தேவையான சக்தியானது , காலை உணவை உண்ட பின்பு தான் கிடைக்கிறது. ஆகவே எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணாமல் இருக்கலாம். ஆனால் காலையில் மட்டும் உண்ணாமல் இருக்க கூடாது.
அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்காக நிறைய ரெசிபிக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எளிமையாக செய்யும் வண்ணமும், பலருக்கும் பிடித்தது என்று சொன்னால் சாண்ட்விச். இத்தகைய சாண்ட்விச் காலை உணவாக மட்டுமின்றி, மாலையில் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடக்கூடியது.
சாண்ட்விச் ரெசிபிக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில எளிய வகை சாண்ட்விச் ரெசிபிக்களைப் படித்து பார்த்து, பிடித்ததை வீட்டில் சமைத்து சாப்பிடுவோமா!!!

காளான் பன்னீர் சாண்ட்விச்
சைவ பிரியர்களுக்கு, அவைச உணவின் சுவையை கொடுக்கும் வகையில் சைவத்தில் இருக்கும் காய் தான் காளான். எனவே அத்தகைய காளான் மற்றும் பன்னீரை வைத்து சுவையான முறையில் சாண்ட்விச் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச்
வீட்டிலேயே பிடித்தவாறு, வேண்டிய காய்கறிகளை வைத்து, சைவ சாண்ட்விச் செய்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகரிக்காமல் இருக்கும். அதிலும் காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு, அந்த காய்கறிகளை வைத்து, சாண்ட்விச் செய்து கொடுத்தால், சிறப்பானதாக இருக்கும்.

ஃபுரூட் சாண்ட்விச்
குழந்தைகளுக்கு காலை வேளையில் பழங்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் உள்ள பிரட் துண்டுகளை வைத்து, ஒரு சாண்ட்விச் செய்து கொடுக்கலாம்.

முட்டை சாண்விட்ச்
புரோட்டீன் அதிகம் முட்டையை வித்தியாசமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்களுக்கு முட்டை சாண்ட்விச் சரியானதாக இருக்கும். மேலும் இது சுவையானதாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.

குடைமிளகாய் சாண்ட்விச்
குடைமிளகாய் வாசனை சிலருக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே அதனை சிலர் பலவாறு சமைத்து சாப்பிடுவார்கள். அதில் ஒன்று தான் சாண்ட்விச். இந்த குடைமிளகாய் சாண்ட்விச் மிகவும் சுவையுடன் இருக்கும்.

சிக்கன் சாண்ட்விச்
சிலருக்கு சிக்கனை வைத்து சாண்ட்விச் செய்தால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதனை கடைகளில் மட்டும் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது அதனை வீட்டிலேயே ஈஸியாக சுவையான ருசியில் செய்து, வேண்டிய அளவு சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications