Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் 10 சுவையான சைவ ரெசிபிக்கள்!!!
பெரும்பாலான பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவார்கள். சொல்லப்போனால் உலகில் பாதி பெண்கள் இரத்தசோகை பிரச்சனைக்கு ஆளாகியிருப்பார்கள். இத்தகைய இரத்தசோகை நோயானது, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. எனவே இதற்கு மருத்துவரிடம் சென்றால், அவர்கள் இரும்புச்சத்து நிறைந்த டானிக், மாத்திரை போன்றவற்றைக் கொடுப்பார்கள். ஆனால் இந்த மருந்து மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான தீர்வு என்னவென்றால், இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது தான். அதில் கீரைகள், ப்ராக்கோலி, கொண்டைக்கடலை, காளான், மாதுளை போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது தான். இத்தகைய உணவுப் பொருட்களில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஆகவே இரும்புச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு, தமிழ் போல்ட் ஸ்கை இரும்பச்சத்து நிறைந்துள்ள ஒருசில ரெசிபிக்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சமைத்து சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பசலைக் கீரை புலாவ்
பசலைக் கீரையின் எண்ணற்ற நன்மைகளை பார்த்திருப்போம். இதுவரை அத்தகைய பசலைக் கீரையை பொரியல், கடைசல் என்று தான் செய்திருப்போம். ஆனால் இந்த பசலைக் கீரையை வைத்து, ஈஸியான முறையில் புலாவ் கூட செய்யலாம்.

பீட்ரூட் மசாலா
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் சிலருக்கு பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், பிடிக்காது. ஆனால் அத்தகைய பீட்ரூட்டை விரும்பி சாப்பிடும் வகையில் சமைத்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியெனில் அதற்கு பீட்ரூட் மசாலா தான் சிறந்தது.

துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜி
கீரை உடலுக்கு மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே வாரத்தற்கு இரண்டு முதல் மூன்று நாட்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரையில் பசலை கீரையின் நன்மைகளைப் பற்றி நிறைய படித்திருப்போம். அத்தகைய கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து, ஒரு சப்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

காஷ்மீரி காராமணி மசாலா
காராமணியில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. எனவே இந்த காராமணியை அதிகம் சமைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தசோகையை தடுக்கலாம். அதிலும் காராமணியை காஷ்மீர் ஸ்டைலில் மசாலா செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

பசலைக்கீரை காளான் குழம்பு
காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும்.

ப்ராக்கோலி சப்பாத்தி
ப்ராக்கோலியில் இரும்புச்சத்துக்களானது அதிகம் உள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை உணவில் அதிகம் சேர்த்தால், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். அதிலும் ப்ராக்கோலியை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.

மாதுளை தயிர் சாதம்
தயிர் சாதத்தை பலவாறு செய்யலாம். அதில் ஒன்று தான் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பழமான மாதுளையை சேர்த்து செய்யப்படும் தயிர் சாதம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

பீட்ரூட் சாம்பார்
பீட்ரூட் சாம்பார் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த சாம்பார் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், மிகவும் சுவையான ருசியில் இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து அழுத்துப் போனவர்கள், இந்த பீட்ரூட் சாம்பாரை ட்ரை செய்து பார்க்கலாம்.

வெந்தயக் கீரை சப்பாத்தி
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வெந்தயக் கீரையை வைத்து சப்பாத்தியும் செய்ய முடியும். பொதுவாக சப்பாத்தியில் கோதுமை மாவை மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த சப்பாத்தியில் கோதுமை மாவுடன், கடலை மாவையும் சேர்த்து செய்யப் போகிறோம். அதனால் இதன் சுவை சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா
சோலே பாலக் மசாலா என்னும் கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா, பஞ்சாபில் மிகவும் பிரபலமானது. மேலும் இது மிகவும் சுவையானது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ரெசிபிக்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த மசாலாவானது மிகவும் காரமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications