இந்த மீன் குழம்பு வைக்க மீனே வேணாம்... வீட்டிலிருக்கும் பொருட்களே போதும்... ட்ரை பண்ணி பாருங்க...!

Posted By:

Saiva Meen Kuzhambu recipe in Tamil: சிலருக்கு சைவ உணவுகள் மட்டும் தான் பிடிக்கும். சிலருக்கு அசைவம் என்றால் ஏக பிரியம். சிலர் முட்டை உணவு வகைகளை மட்டும் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் அசைவ உணவின் சுவை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள், ஆனால் அவர்களுக்கு அசைவம் சாப்பிட விருப்பம் இருக்காது.

ஏன் சில அசைவ பிரியர்களுமே புரட்டாசி, பங்குனி, மற்றும் கார்த்திகை போன்ற மாதங்களில் அசைவ உணவை தவிர்ப்பதால் கவலைப்படுவார்கள். அவர்களை மகிழ்விக்கவே சைவ உணவு பொருட்களை கொண்டு எப்படி அசைவம் செய்வது என பார்க்க போகிறோம். வாங்க சைவ மீன் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.

Veg Fish Curry Recipe How to Make Saiva Meen Kuzhambu

தேவையான பொருட்கள்:

- நல்லெண்ணெய் - 50 மில்லி
- தக்காளி - 2
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- பூண்டு - 10 பல்
- பெரிய வெங்காயம் - 2
- புளி - 2 பெரிய எலுமிச்சை அளவு

மீன் செய்ய:

- தட்டைப்பயறு -50 கிராம்
- பச்சைப்பயறு - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 5
- சோம்பு - சிறிதளவு
- மஞ்சள்தூள் - ½ டீ ஸ்பூன்
- லச்சக்கட்டை கீரை - 3 இலை

மசாலா அரைக்க‌:

- சின்ன வெங்காயம் - 15 அல்லது 18
- தக்காளி - 3 (நறுக்கியது)
- வரமிளகாய் -10
- மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ½ டீ ஸ்பூன்
- கசகசா - ¼ டீ ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

- தட்டைப்பயறு மற்றும் பச்சைபயரை சுத்தமாக கழுவி தண்ணீர் சேர்த்து ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.

- வெங்காயத்தை தோல் உரித்து கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

- பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்து வைத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒவ்வொன்றாக உரித்த வைத்த சின்ன வெங்காயம், வரமிளகாய், மல்லித்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கசகசா, துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.

- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். புளியை நன்றாக ஊற வைத்து கரைத்து வடித்து எடுத்து வைக்கவும்.

- ஊற வைத்த தட்டைப்பயறு, பச்சைப்பயறு, பச்சை மிளகாய், சோம்பு, மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அரைத்து மாவு எடுத்து கொள்ளவும்.

- பின் லச்சக்கட்டைக் கீரையின் இலையில் மாவை கொலுக்கட்டை போன்று வைத்து நடுவில் ஒரு

- மரக்குச்சியை மீனின் நடுவில் முள் இருப்பது போல மாவின் நடுவில் வைக்கவும்.

- இலையை ரோல் போல் சுருட்டி ஒரு குச்சியால் குத்திவிட்டால், மாவு வெளியே வராது.

- பின் இதை இட்லித் தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

- நன்றாக ஆறிய பின் நடுவில் உள்ள மரக்குச்சியை எடுத்துவிட்டு துண்டுகளாக மீன் போல வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.

- பின் சோம்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.

- அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

- இதனுடன் கரைத்து வடிகட்டிய புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

- அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

- கடைசியாக தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த துண்டுகளை சேர்த்து கால் மணி

- நேரம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சைவ மீன் குழம்பு தயார்!

[ of 5 - Users]
Story first published: Sunday, June 15, 2025, 23:40 [IST]
Desktop Bottom Promotion