வாழைக்காய் புட்டு ரெசிபி... வாழைக்காயை இப்படி செஞ்சா எவ்வளவு செஞ்சாலும் பத்தாது... ட்ரை பண்ணி பாருங்க...!

Posted By:

வாழைக்காய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பஜ்ஜிதான். வாழைக்காயை பொரியல் மற்றும் குழம்பு போன்றவற்றில் மிகவும் அரிதாகவே பயன்படுத்துவார்கள். ஆனால் வாழக்காயை வைத்து சுவையான புட்டு செய்யலாம் என்பது அறியாத ஒன்றாகும். திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான இந்த புட்டு விரத காலங்களில் செய்வதற்கு ஏற்றது.

ஏனெனில் இந்த வாழைக்காய் புட்டு செய்வது எளிதானது மற்றும் இதை செய்ய வெங்காயம் மற்றும் பூண்டு தேவைப்படுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சமைத்தால் இதன் சுவை மேலும் அருமையாக இருக்கும். வாழைக்காய் பொதுவாக வாயு நிறைந்த காய்கறி என்று நம்பப்படுகிறது. எனவே இதில் பெருங்காயம். இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்ப்பது சிக்கலைத் தவிர்க்க உதவும். இந்த சுவையான வாழைக்காய் புட்டை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Vazhakkai Puttu Recipe How To Prepare Vazhakkai Puttu in Tamil

தேவையானப் பொருட்கள்:

- 2 வாழைக்காய்
- 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு
- 1/2 தேக்கரண்டி கடலைப் பருப்பு
- 2 சிறிய பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி துண்டுகள்
- 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1/4 கப் துருவிய தேங்காய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை:

- வாழைக்காயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்
- தோலை லேசாக உரிக்கவும். தோலை முழுதாக உரிக்க வேண்டாம், வாழைக்காயில் சிறிது தோலை விடவும். இதனால் வாழைக்காயை வேகவைத்தாலும் குலைந்து போகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. தோல் அதை ஒன்றாக வைத்திருக்கும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் சுமார் 15-20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வாழைக்காய் நன்கு வெந்ததும் அதை நீரில் இருந்து எடுத்து தனியாக வைக்கவும். தோலின் நிறம் வித்தியாசமாகத் தோன்றினாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தோலை மட்டும் உரிக்கவும்.
- தோல் உரித்த வாழைக்காயை தேங்காய் போல் துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- இப்போது நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் துண்டுகளை சேர்க்கவும். ஒருவேளை நீங்கள் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதாக இருந்தால் இந்த நிலையில் சேர்க்கவும்.
- இந்த நிலையில் உப்பு சேர்த்து அதன்பின் தனியாக எடுத்து வைத்த வாழைக்காயை அதில் போட்டு நன்கு கிளறவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
- நன்கு வெந்ததும் தேங்காய் துருவி இறக்கவும்.
- காரம் குறைவான சுவையான இந்த வாழைக்காய் புட்டு விரத காலங்களில் சமைக்க ஏற்றது.

[ of 5 - Users]
Story first published: Friday, November 8, 2024, 18:30 [IST]
Desktop Bottom Promotion