Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. உளுந்தங்களியை செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? வீட்டில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அவற்றை அரைத்து பொடி செய்து, அந்த பொடியைக் கொண்டு உளுந்தங்களி செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்வீட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? வீட்டில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அவற்றை அரைத்து பொடி செய்து, அந்த பொடியைக் கொண்டு உளுந்தங்களி செய்து கொடுங்கள். இந்த உளுந்தங்களி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த உளுந்தங்களியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த உளுந்தங்களியை சாப்பிட, உடலில் இரத்தம் அதிகரிக்கும். இந்த களியை காலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு உளுந்தங்களி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்தங்களியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 3/4 கப்
* கருப்பட்டி - 1 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டியை கரைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, ஒரு வாணலியில் ஊற்ற வேண்டும்.
* பின்பு அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். வெல்லப்பாகு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மாவை மெதுவாக தூவி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும்.
* அப்படி கிளறும் போது, களியை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும். களி கெட்டியானதும், அதில் எண்ணெயை ஊற்றி கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அந்த களியை எண்ணெய் பயன்படுத்தி சிறு உருண்டைகளாக உருட்டினால், சத்தான உளுந்தங்களி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications