Latest Updates
-
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
Ugadi Pachadi Recipe : உகாதி பச்சடி ரெசிபி
உகாதி பச்சடி என்பது 6 பொருட்களின் கலவையாகும். இந்த 6 பொருட்களும் வாழ்க்கையின் 6 உணர்ச்சிகளைக் குறிக்கிறது. நீங்கள் உகாதி பச்சடியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
உகாதி என்பது இந்தியாவின் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களின் புத்தாண்டு தினமாகும். இந்த உகாதி பண்டிகை நாளில் கடவுளுக்கு படைக்க தயாரிக்கப்படும் மிகவும் முக்கியமான உணவுகளில் ஒன்று தான் உகாதி பச்சடி. இந்த உகாதி பச்சடி என்பது 6 பொருட்களின் கலவையாகும். இந்த 6 பொருட்களும் வாழ்க்கையின் 6 உணர்ச்சிகளைக் குறிக்கிறது.

நீங்கள் உகாதி பச்சடியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே உகாதி பச்சடியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 கப்
* புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
* பச்சை மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
* வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம்/நாட்டுச் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மாங்காயை நன்கு கழுவி, தோல் நீக்கி, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை ஒரு பௌலில் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து, சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வடிகட்டிய புளி சாற்றில் மீதமுள்ள 1/2 கப் நீரை ஊற்றி, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வேப்பம்பூவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி , இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறினால், உகாதி பச்சடி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
