For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடகா ஸ்பெஷல்.. உடுப்பி சாம்பார்

கர்நாடகாவில் செய்யப்படும் சாம்பார் சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அதுவும் கர்நாடகாவில் உடுப்பி ஸ்டைல் சாம்பார் இன்னமும் அற்புதமாக இருக்கும். இந்த உடுப்பி சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Posted By:
|

நீங்கள் சாம்பார் பிரியரா? வித்தியாசமான சுவையில் சாம்பார் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? கர்நாடகாவில் செய்யப்படும் சாம்பார் சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அதுவும் கர்நாடகாவில் உடுப்பி ஸ்டைல் சாம்பார் இன்னமும் அற்புதமாக இருக்கும். இந்த உடுப்பி சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சாம்பார் இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் நிறைய காய்கறிகளை சேர்த்து செய்வதால், இது உடலுக்கு ஆரோக்கியமானது.

Udupi Sambar Recipe In Tamil

நீங்கள் உங்கள் வீட்டில் உடுப்பி ஸ்டைல் சாம்பாரை செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு உடுப்பி சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)

* தக்காளி - 2 (நறுக்கியது)

* கறிவேப்பிலை - சிறிது

* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* புளிச்சாறு - 2-3 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

பருப்பு வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1 கப்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* தண்ணீர் - 3 கப்

சாம்பார் மசாலாவிற்கு...

* வரமிளகாய் - 6-8

* மல்லி விதை - 5 டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் - 1 டீஸ்பூன்

* தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)

* எண்ணெய் - 1 டீஸ்பூன்

சாம்பாருக்கான காய்கறிகள்...

* கேரட் - 1 (நறுக்கியது)

* வெண்டைக்காய் - 4 (நறுக்கியது)

* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)

* மஞ்சள் பூசணி - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* புடலங்காய் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)

* பீன்ஸ் - 5 (நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* எண்ணெய்/நெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வரமிளகாய் - 2

* கறிவேப்பிலை - சிறிது

* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நன்கு நீரில் கழுவி குக்கரில் போட்டு, 3 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு, குறைவான தீயில் வைத்து ஒரு 5 நிமிடம் வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் சாம்பார் மசாலாவை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாம்பார் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிஸ் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் நீரை ஊற்றி வாணலியை மூடி 10 நிமிடம் காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்ததும், வேக வைத்துள்ள பருப்பு, அரைத்த சாம்பார் மசாலா, சர்க்கரை மற்றும் புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறினால், உடுப்பி சாம்பார் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
English summary

Udupi Sambar Recipe In Tamil

Want to know how to make a udupi sambar recipe at home easily? Take a look and give it a try...
Story first published: Friday, December 9, 2022, 13:50 [IST]
Desktop Bottom Promotion