Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Udupi Sambar Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு இல்லங்களில் அடிக்கடி வைக்கும் குழம்பு என்றால் அது சாம்பார்தான். சாம்பாரையும், நம்மையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை. உங்கள் வீட்டிலும் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் சாம்பார் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்வதாக இருந்தால், இந்த உடுப்பி ஸ்டைல் சாம்பாரை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த உடுப்பி ஸ்டைல் சாம்பார் கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். கர்நாடகாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் இந்த சாம்பார் கிடைக்கும். இந்த சாம்பாரின் தனித்துவமே இதன் சற்று இனிப்பான சுவையும், இதில் அரைத்து சேர்க்கப்படும் மசாலாவும்தான். இந்த உடுப்பி சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். ஒரே மாதிரியான சாம்பார் சாப்பிட்டு போரடித்தவர்கள் இந்த சாம்பாரை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய்
- 2 நறுக்கிய கத்தரிக்காய்
- 1 முருங்கைக்காய்
- 1 நடுத்தர அளவு தக்காளி
- ½ கப் துவரம் பருப்பு
- ½ கப் தண்ணீரில் ஊறவைத்த புளி
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கால் ஸ்பூன் பெருங்காயம்
- 1 ஸ்பூன் பொடித்த வெல்லம்
- தேவையான அளவு உப்பு
மசாலா அரைக்க:
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் மல்லி விதைகள்
- 5 வர மிளகாய்
- ½ ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 5 மிளகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- அரை கப் துவரம் பருப்புடன் சுமார் ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு வேகும் வரை சமைக்கவும். வெந்த பருப்பை நன்றாக மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் மிளகு, பிறகு காய்ந்த மிளகாய், இறுதியாகத் துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்க வேண்டும். பொருட்களை அதிகமாக வறுக்கத் தேவையில்லை; அவற்றின் நிறம் லேசாக மாறினால் போதுமானது.
- வறுத்த பொருட்களை ஆறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
- காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, முதலில் மஞ்சள் பூசணிக்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் மற்ற காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அதன்பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் சிறிது மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து சுமார் 8 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- காய்கறிகள் முக்கால் பதம் வெந்த பிறகு ஊறவைத்த புளியிலிருந்து எடுக்கப்பட்ட புளிக் கரைசலைச் சேர்க்கவும். இதை சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் பெருங்காயத்தைச் சேர்த்து, மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியாக, வேகவைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மூடி, 8 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். சாம்பார் அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும். சாம்பார் ஆறிய பிறகு கெட்டியாகிவிடும் என்பதால், கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்க்கவும்.
- தாளிப்பதற்கு, ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், கறிவேப்பிலையைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
- இந்த தாளிப்பை சாம்பார் மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான உடுப்பி சாம்பார் ரெடி!



Click it and Unblock the Notifications
