உடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க...

Posted By:

Udupi Hotel Neer Chutney Recipe In Tamil: காலை உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? இட்லி பெரும்பாலும் சட்னி தான் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் தேங்காய் சட்னி ரொம்ப பிடிக்குமா?

அப்படியானால் அடுத்தமுறை இட்லிக்கு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி நன்கு காரமாகவும், நீர் போன்றும் இருக்கும். இப்படி சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சட்னியை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

Udupi Hotel Neer Chutney How To Make a Neer Chutney Recipe

உங்களுக்கு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* இஞ்சி - 1/2 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், இஞ்சி, புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, நன்கு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 17, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion