தக்காளி சட்னியுடன் இந்த ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க... டேஸ்ட் செமயா இருக்கும்..

Posted By:

Tomato Chutney: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு பெரும்பாலும் தக்காளி சட்னியை தான் செய்வீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் தக்காளி சட்னியைப் போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக முறையில் ட்ரை செய்யுங்கள்.

இந்த மாதிரி தக்காளி சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி இப்படி தான் செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Tomato Chutney How To Make Tomato Chutney With Coconut Recipe

உங்களுக்கு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய தக்காளி - 5 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)

தாளிப்பதற்கு...

* பூண்டு - 10 பல்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 கடுகு
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு, தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ளதை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு பற்களை தட்டிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை வதக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி சட்னி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Monday, April 29, 2024, 8:28 [IST]
Desktop Bottom Promotion