Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இட்லி, தோசைக்கு பருப்பு இல்லாத டிபன் சாம்பாரை செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க...
Tiffin Sambar Without Dal In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பு சேர்க்காத டிபன் சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பாரை செய்தால், தொட்டு சாப்பிடாமல் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள்.
அந்த அளவில் இந்த சாம்பார் ருசியாக இருக்கும். ஒருமுறை இந்த சாம்பாரை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். முக்கியமாக இந்த சாம்பார் சட்டென்று செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். அவ்வளவு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பருப்பு சேர்க்காத டிபன் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு சேர்க்காத டிபன் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (உடைத்தது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* தேங்காய் - 1 சில்லு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 ஸ்பூன்
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்
தூள், சாம்பா தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கலந்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, துவரம்
பருப்பு, வெந்தயம், மல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய 1 சில்லு தேங்காயை சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
பொட்டுக்கடலையையும் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் வேக வைத்துள்ள வெங்காயம் தக்காளி நீரை
வடிகட்டி ஊற்ற வேண்டும்.
* பின்பு குக்கரில் உள்ள வெங்காயம் தக்காளியை மத்து கொண்டு நன்கு
மசித்து விட்டு, வாணலியில் கொதித்துக் கொண்டிருப்பதுடன் சேர்த்து
கிளறி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி,
சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10
நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான பருப்பு சேர்க்காத சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications