Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
நீங்க வெக்குற சாம்பார் ருசியா இருக்காதா? அப்ப இப்படி ஒருடைம் சாம்பார் வையுங்க.. அள்ளும்..
Lunch Sambar Recipe In Tamil: மதியம் உங்கள் வீட்டில் சாம்பார் வைக்கப் போகிறீர்களா? நீங்கள் என்ன தான் பார்த்து பார்த்து சாம்பார் வைத்தாலும், அந்த சாம்பார் ருசியாகவே இருக்காதா? அப்படியானால் ஒருமுறை இந்த பக்குவத்தில் சாம்பார் வைத்துப் பாருங்கள். இப்படி சாம்பார் வைக்கும் போது, அந்த சாம்பார் ருசியாக இருப்பதோடு, வீடே கமகமவென்று மணக்கும்.
முக்கியமாக இந்த மாதிரி சாம்பாரை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், இதுவரை உங்கள் சாம்பாரைக் கண்டு அஞ்சி ஓடியவர்கள், உங்களை அடிக்கடி சாம்பார் வைத்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். இந்த சாம்பார் சாதத்துக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 100 கிராம்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (நறுக்கியது)
* சிறிய மாங்காய் - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை போட்டு 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, சீரகம், மஞ்சள் தூள்,
பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள்
சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சாம்பார் தூள் சேர்த்து கிளறி, பின் நறுக்கிய
கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், மாங்காய் சேர்த்து
நன்கு கிளறி, வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் புளி சாற்றினை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து 5-8 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவி, சிறிது நெய் ஊற்றி கிளறினால், சுவையான மிக்ஸ்டு
வெஜிடேபிள் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications