2 கப் துவரம் பருப்பு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இந்த மாதிரி கபாப் செஞ்சு சாப்பிடுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..

Posted By:

Thuvaram Paruppu Kebab Recipe In Tamil: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்யும் போது நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட ஆசையாக இருக்கும். அப்போது நிறைய பேர் தங்கள் வீடுகளில் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து சாப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால், கபாப் செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் வீட்டில் 2 கப் துவரம் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் துவரம் பருப்பு கபாப் செய்யுங்கள். இந்த கபாப் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும். அதோடு, இந்த கபாப் புரோட்டீன் அதிகம் நிறைந்தது என்பதால், சத்தானதும் கூட.

Thuvaram Paruppu Kebab How To Make a Toor Dal Kebab Recipe

உங்களுக்கு துவரம் பருப்பு கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 2 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், 5 பூண்டு பற்கள், 3 பச்சை மிளகாய், உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சீரகத் தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இவற்றை சேர்த்து, நன்கு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கொஞ்சமாக எடுத்து, உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கபாப்பை சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி போட்டு ப்ரை செய்து எடுத்தால், சுவையான துவரம் பருப்பு கபாப் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 24, 2025, 20:33 [IST]
Desktop Bottom Promotion