Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
வெறும் 3 பொருள் இருந்தா.. இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ் செய்யலாம்.. இத 1 வாரம் கூட வெச்சு சாப்பிடலாம்...
Thirunelveli Famous Varutha Milagai Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை, இட்லியை செய்வீர்களா? அப்படியானால் கட்டாயம் உங்கள் வீட்டில் அதற்கு இன்ஸ்டன்ட் சைடு டிஷ்ஷாக இட்லி பொடியை செய்து வைத்திருப்பீர்கள். எப்போது இட்லி, தோசைக்கு சட்னி செய்ய அலுப்பாக உள்ளதோ, அப்போது இந்த இட்லி பொடியை சைடு டிஷ்ஷாக எடுத்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால் இப்படி ஒரே சுவையில் இட்லி பொடியை சுவைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை திருநெல்வேலி ஃபேமஸ் வறுத்த மிளகாய் பொடியை செய்யுங்கள். இந்த மிளகாய் பொடியை செய்வதற்கு வெறும் 3 பொருட்கள் இருந்தாலே போதும். முக்கியமாக இதை ஒருமுறை செய்தால், 2 நாட்கள் வரை வெளியேயும், ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், 1 வாரம் வரையும் வைத்து சாப்பிடலாம்.

இந்த சைடு டிஷ் நிச்சயம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். நன்கு காரசாரமாக சாப்பிட நினைக்கும் போது, இந்த பொடியை செய்து வைத்துக் கொண்டால், ருசி அள்ளும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கும், வேலை செல்பவர்களுக்கும் ஏற்ற ரெசிபி. இதை ஒவ்வொரு பேச்சுலரும், வேலைக்கு செல்பவர்களும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
உங்களுக்கு திருநெல்வேலி ஃபேமஸ் வறுத்த மிளகாய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருநெல்வேலி ஃபேமஸ் வறுத்த மிளகாய் பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 6
* பூண்டு - 6 பல்
* புளி - சிறிய துண்டு (விருப்பமிருந்தால்)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், 1 கைப்பிடி கறிவேப்பிலையை நீரில் நன்கு கழுவி
எடுத்து, எண்ணெயில் போட்டு மொறுமொறுவென்று ப்ரை செய்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே எண்ணெயில் வரமிளகாயை சேர்த்து அதையும் நன்கு ப்ரை
செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* அடுத்து அம்மிக்கல் அல்லது மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை
சேர்த்து, அத்துடன் பூண்டு பற்களை தோலோடு சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் சிறிய துண்டு புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தனியாக எடுத்து
வைத்துள்ள நல்லெண்ணெயை ஊற்றி கிளறினால், சுவையான திருநெல்வேலி ஃபேமஸ்
வறுத்த மிளகாய் பொடி தயார்.



Click it and Unblock the Notifications











