Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தட்டைப்பயறு குழம்பை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துப்போயிடும்...
Thattai Payiru Kathirikkai Kuzhambu Recipe In Tamil: மதியம் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அருமையான குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தட்டைப்பயறு உள்ளதா? அப்படியானால் அந்த தட்டைப்பயறு மற்றும் கத்திரிக்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள்.
இந்த தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இப்படி ஒருமுறை குழம்பு செய்தால், பின் அடிக்கடி இந்த குழம்பை செய்ய சொல்லிக் கேட்பார்கள். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தட்டைப்பயறு - 100 கிராம்
* புளி - 1 எலுமிச்சை அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கத்திரிக்காய் - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 30 பல்
* சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் தட்டைப்பயறை குறைந்தது 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும். அதன் பின் புளியை நீரில் ஊற வைத்து, பின் அதை
பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எணணெய்
ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,
வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை 1/2 கப் சேர்த்து நன்கு நிறம் மாற
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் மிளகாய் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் தட்டைப்பயறை கழுவி சேர்த்து, பயறு மூழ்கும் அளவில்
நீரை ஊற்றி, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில்
போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூளை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொண்டு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்கள், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு
நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளி நீரை
ஊற்றி, பின் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட
வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள தட்டைப்பயறை நீருடன் சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி கிளறி, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறி, குறைவான
தீயில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











