Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடை
மாலை வேளையில் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? அப்படியானால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடையை செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளோருக்கும் டீ, காபி கொடுக்கும் போது ஒரு அசத்தலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? அப்படியானால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடையை செய்து கொடுங்கள்.

இது தஞ்சாவூரில் உள்ள ஐயர் வீட்டில் செய்யக்கூடிய ஒரு பிரபலமான ஸ்நாக்ஸ் ஆகும். உங்களுக்கு தவலை அடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரில் குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பு மற்றும் அரிசியில் உள்ள நீரை முற்றிலும் வற்றிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சீரகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, துருவிய தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நீர் முற்றிலும் வற்றும் வரை வேக வைத்து இறக்கி, 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* மாவானது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, தயாரித்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் எண்ணெய் தடவிய வாழை இலையில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து, தட்டையாக தட்டிக் கொண்டு, நடுவே ஒரு ஓட்டையை போட வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ளதைப் போட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும், பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி தோசைக் கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் தவலை அடை தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications








