இட்லிக்கு ஒருமுறை இந்த தள்ளுவண்டி தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல 2 இட்லி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவாங்க..

Posted By:

Thalluvandi Thanni Chutney Recipe In Tamil: காலையில் இட்லி செய்ய போகிறீர்களா? இட்லிக்கு சற்று நீர் போன்று சட்னி அரைத்து ஊற்றி சாப்பிட்டால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமான அளவில் இட்லியை சாப்பிடலாம். அதுவும் பெரிய பெரிய ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சட்னியை விட, தள்ளுவண்டி கடைகளில் கொடுக்கப்படும் சட்னியின் சுவையே தனி தான்.

சொல்லப்போனால் பெரிய ஹோட்டல்களில் வயிறு நிறைய சாப்பிடுவதை விட, தள்ளுவண்டி கடைகளில் வயிறு நிறைய சாப்பிடுவதோடு, திருப்தியாகவும் சாப்பிடுவோம். இதற்கு அந்த கடைகளில் கொடுக்கப்படும் சட்னியை சுவையே முக்கிய காரணம். அதுவும் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் தண்ணி சட்னியின் சுவையே தனி தான்.

Thalluvandi Kadai Thanni Chutney How To Make a Thalluvandi Thanni Chutney Recipe

இந்த சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்ய நினைத்தால், இன்று ட்ரை செய்யுங்கள். இந்த சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.

உங்களுக்கு தள்ளுவண்டி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தள்ளுவண்டி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 6 பல்
* சின்ன வெங்காயம் - 6
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்
* பொட்டுக்கடலை - 50 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி, கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தண்ணி சட்னி என்பதால், சற்று அதிக நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தள்ளுவண்டி கடை ஸ்பெஷல் தண்ணி சட்னி தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Saturday, August 3, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion