Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இட்லிக்கு இப்படி ஒருடைம் தக்காளி சட்னி செய்யுங்க.. தொட்டு சாப்பிடாம ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Thakkali Pudina Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் பெரும்பாலும் இட்லி தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியைத் தான் கேட்பார்களா? அதுவும் சற்று புளிப்பாகத் தான் சட்னியை கேட்பார்களா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் தக்காளி சட்னியை செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தக்காளி சட்னியை செய்து போரடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமான சுவையில் தக்காளி சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தள்ளுவண்டி கடை தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள். மேலும் இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த சட்னியை தாளிக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களுக்கு தக்காளி புதினா வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தள்ளுவண்டி கடை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 3-5 (காரத்திற்கு ஏற்ப)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புதினா - 1 கைப்பிடி
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து,
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் புதினாவை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் எவ்வளவு நீராக வேண்டுமோ, அவ்வளவு நீரை ஊற்றி கலந்தால்,
சுவையான தக்காளி புதினா வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
