Thaipusam 2026: தைப்பூசம் நாளில் இந்த திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..

Posted By:

Thaipusam 2026: முருகனுக்கு உகந்த தைப்பூசம் வருகிற பிப்ரவரி 01 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் முருகப்பெருமானின் ஆசியைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். முக்கியமாக முருகனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து பிரசாதமாக படைத்து வழிபடுவார்கள்.

நீங்கள் இந்த தைப்பூசம் நாளில் முருகனுக்கு பிடித்ததை செய்து படைத்து வழிபட நினைக்கிறீர்களா? அப்படியானால் திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்கள். இந்த திருப்பாகம் செய்வது மிகவும் சுலபம். இதை வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம். ஒருமுறை இந்த திருப்பாகத்தை வீட்டில் செய்தால், பின் அடிக்கடி செய்து தரச்சொல்லி கேட்பார்கள்.

Thaipusam 2026 How To Make a Thiruchendur Special Thirupagam

உங்களுக்கு திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முந்திரி - 50 கிராம்
* கடலை மாவு - 1/2 கப்
* காய்ச்சிய பால் - 1 கப்
* நெய் - 1/2 கப் (50-100 மிலி)
* சர்க்கரை - 100 கிராம்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முந்திரியை மிக்சர் ஜாரில் போட்டு, விட்டு விட்டு அரைத்து மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை எடுத்து, அதில் கடலை மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக 50-100 மிலி நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* கலவையானது நன்கு அல்வா போன்ற பதத்திற்கு திரண்டு வந்து, நெய் பிரிந்து வரும் போது, அதை இறக்கினால், சுவையான திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 31, 2026, 21:31 [IST]
Desktop Bottom Promotion