Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
சிக்கன் வாங்குனா இந்த காரசாரமான தெலுங்கானா சிக்கன் செய்யுங்க... எதுக்கூட சாப்பிட்டாலும் சூப்பரா இருக்கும்...!
Telangana Chicken Fry Recipe in Tamil: சண்டே என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுக்கான நாள் என்று மாறிவிட்டது. ஞாயிறு காலையில் கண் விழிக்கும் போதே கறியைப் பார்த்தால்தான் பெரும்பாலான மக்களுக்கு சண்டே மகிழ்ச்சியாகத் தொடங்கும். அனைத்து நாட்களிலும் அசைவ உணவுகள் கிடைத்தாலும் சண்டே அசைவம் எப்போதுமே கூடுதல் ஸ்பெஷல்தான். பொதுவாக அசைவ உணவுகளை பல வித்தியாசமான வழிகளில் சமைக்கலாம்.
சமையல் என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை ஆயிரக்கணக்கான வழிகளில் சுவையாக சமைக்கலாம். அண்டை மாநிலமான தெலுங்கானா அசைவ உணவுகளுக்கு புகழ்பெற்றது. வழக்கமான சிக்கனையே அவர்கள் சில கூடுதல் பொருட்கள் சேர்த்து காரசாரமாக அட்டகாசமான சுவையில் செய்வார்கள்.

இந்த பதிவில் சிம்பிளான மற்றும் சுவையான தெலுங்கானா ஸ்டைல் சிக்கன் வறுவலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த தெலுங்கானா ஸ்டைல் சிக்கன் ப்ரைபிரியாணி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
தேவயானைப் பொருட்கள்:
- எலும்பில்லா சிக்கன் - அரை கிலோ
- வெங்காயம் - 2
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கரம் மசாலா - 2 ஸ்பூன்
- தனியாத் தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
- இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வெங்காயத்தை உரித்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிக்கனை அதில் போட்டு வதக்கவும்.
- சிக்கன் சிறிது வதங்கியதும் உடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அனைத்தையும் சிறிது நேரம் நேரம் நன்கு வதக்கவும்.
- சிக்கன் பாதி வெந்த பிறகு அதில் மிளகாய்த் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
- பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- பின்னர் மீண்டும் திறந்து ஏற்கனவே அரைத்து வைத்து இருக்கும் வெங்காய விழுதை அதில் போட்டு மேலும் நன்கு வதக்கவும்.
- சிக்கன் இப்போது முக்கால் பதம் வெந்ததும் அதில் தனியா தூள், கரம் மசாலா போட்டு சிறிது நேரம் நன்கு மூடி வைக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைத்து விடவும்.
- இறுதியாக சிக்கனில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- சுவையான தெலுங்கானா சிக்கன் ப்ரை ரெடி. இதை சாம்பார் சாதம், பிரியாணி அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து மகிழ்ச்சியாக சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications











