Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
தஞ்சாவூர் ஸ்பெஷல் இஞ்சி புளி - இத செஞ்சு வெச்சா.. 1 மாதம் வரை கெட்டுப்போகாது.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்
Tanjore Special Ingi Puli Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ஊறுகாய் பிரியர்களா? அனைத்துவிதமான உணவுகளுக்கும் ஊறுகாயை வைத்துக் கொள்வார்களா? அப்படியானால் ஒருமுறை தஞ்சாவூர் ஸ்பெஷல் இஞ்சி புளியை செய்யுங்கள். இந்த இஞ்சி புளி இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் என அனைத்தும் கலந்து ருசியாக இருக்கும்.
இதனால் இது தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் என அனைத்து விதமான சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த இஞ்சி புளியை ஒருமுறை செய்தால், ஒரு மாதம் வரை வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு இஞ்சி புளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி புளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இஞ்சி - 350 கிராம்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 100 கிராம்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பொடித்த வெல்லம் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் இஞ்சியை நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் 1 எலுமிச்சை அளவு புளியை எடுத்து, நீரில் ஊற வைத்து, அதைப்
பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் துருவி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து, நிறம் மாறும் வரை
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3
நிமிடம் நன்கு கிளறி விட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு
10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* நீர் ஓரளவு சுண்டியதும், அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு
கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான
இஞ்சி புளி தயார்.
* இந்த இஞ்சி புளியை நன்கு குளிர வைத்து, பின் காற்றுப்புகாத
டப்பாவில் போட்டு தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இஞ்சி
புளி 1 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications











