Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
வாழைப்பழ அப்பம்
குழந்தைகளுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் ஏதாவது கொடுக்க நினைத்தால், கோதுமை மாவு மற்றும் வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் வாழைப்பழ அப்பம் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, அவர்களின் பசியை ஆற்றும். மேலும் இது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் செய்து கொடுக்கும் அருமையான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த வாழைப்பழ அப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப் (பொடித்தது)
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் - 1
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
