For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரிக்கு சம்பா ரவை பாயாசம்!

By Staff
|

முழு கோதுமை தானியங்களை சிறியதாக அழுத்துவதால் கிடைப்பதே உடைந்த கோதுமை எனப்படும் சம்பா ரவையாகும். சம்பா ரவையை கொண்டு பல்வேறு வகையான உணவுகளை நாம் தயாரிக்கலாம்.

நாங்கள் இந்த ஊட்டச்சத்து மிக்க சம்பா ரவை பாயாசம் செய்வதை பற்றி கூறப்போகிறோம்; குறிப்பாக உடல் ஆரோக்கியத்தின் மீது கண்ணும் கருத்துமாய் உள்ள அனைவருக்கும். நீங்கள் இதனை வரும் நவராத்திரிக்கு செய்து, உண்டு மகிழுங்கள்.

இந்த நவராத்தியில், சேமியா அல்லது அரிசியில் பாயாசம் செய்வதற்கு பதிலாக, சம்பா ரவையை கொண்டு பாயாசம் செய்யலாம். இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. நவராத்திரி விரதத்தின் பொது செய்ய வேண்டிய மிகச்சிறந்த உணவுகளில் கண்டிப்பாக இதுவும் ஒன்றாக விளங்கும்.

அதனால் சம்பா ரவை பாயாசத்தை எப்படி செய்வதென்று என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்:

எத்தனை பேருக்கு பரிமாறலாம் - 4

சமைக்க தேவையான நேரம் - 25 நிமிடங்கள்

தயாரிப்பதற்கு தேவையான நேரம்: 5 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

பால் - 500 மி.லி.
சம்பா ரவை - 200 கி
நெய் - 2 டீஸ்பூன்கள்
சர்க்கரை - 1 கப்
முந்திரிப்பருப்பு - 8 முதல் 10
கிஸ்மிஸ் - 8 முதல் 10
ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்

செய்முறை:

1. பால் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

2. ஒரு சட்டியில், நெய்யையும் முந்திரிப்பருப்பையும் சேர்த்து கலந்து, அது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின் அதனுடன் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து, அது பஞ்சு போன்று வரும் வரைக்கும் மீண்டும் வதக்கவும்.

3. அதே சட்டியில், சம்பா ரவையை சேர்த்து, ஒரு 5 நிமிடத்திற்கு நல்லதொரு மனம் வீசும் வரை சின்ன தீயில் வைத்து நன்றாக கிண்டவும்.

4. இப்போது வற்றிய பாலை சமைத்த சம்பா ரவையுடன் சேர்க்கவும். கட்டி ஏதும் உருவாகாமல் இருக்க அதனை தொடர்ச்சியாக கிண்டவும்.

5. இனி ஏலக்காய் பொடி, சர்க்கரை, வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து, 2 நிமிடத்திற்கு சமைக்கவும்.

6. சமைத்த சம்பா ரவை பாயாசத்தை சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறலாம்.

English summary

Navratri Special: Dalia Kheer | Samba Rava Payasam

dalia kheer for navratri, samba rava payasam for navratri, godhuma rava payasam, navratri sweet recipes, sweet recipes with broken wheat, samba rava kheer
Desktop Bottom Promotion