சேமியா கேசரி: நவராத்திரி ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Boldsky

நவராத்திரிக்கு மாலை வேளையில் கடவுளுக்கு படையல் படைக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான ரெசிபியை செய்வார்கள். அந்த வகையில் இன்று மாலை சேமியா கேசரி செய்து கடவுளுக்கு படையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

சரி, இப்போது அந்த சேமியா கேசரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Navratri Spl: Semiya Kesari

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

நெய் - 3 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

குங்குமப்பூ - 1 சிட்டிகை

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

முந்திரி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் மீண்டும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சேமியாவை சேர்த்து, நீர் வற்றி சேமியா நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, குங்குமப்பூ மற்றும் கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின்பு அதில் நெய் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி சேர்த்து பிரட்டி இறக்கினால், சேமியா கேசரி ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Navratri Spl: Semiya Kesari

Want to know how to prepare semiya kesari? Here is the recipe. Check out...
Story first published: Tuesday, September 30, 2014, 16:35 [IST]
Subscribe Newsletter