For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாம்பழ ரப்ரி: தந்தையர் தின ஸ்பெஷல்

By Maha
|

தற்போது மாம்பழம் விலை மலிவில் அதிகம் கிடைப்பதால், தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தைக்கு மாம்பழ ரப்ரி செய்து கொடுத்து அசத்துங்கள். இது இனிப்பான ரெசிபி மட்டுமின்றி, உங்கள் தந்தை விரும்பி சாப்பிடும் வண்ணம் மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

இங்கு தந்தையர் தின ஸ்பெஷலாக மாம்பழ ரப்ரியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, வீட்டில் செய்து கொடுத்து உங்கள் தந்தையை அசத்துங்கள்.

Mango Rabri Recipe For Father's Day

தேவையான பொருட்கள்:

பால் - 2 1/2 கப்
கனிந்த மாம்பழ துண்டுகள் - 1 கப் (தோல் இல்லாதது)
சர்க்கரை - 1/4 கப் அல்லது தேவையான அளவு
பிஸ்தா - 5-6
பாதாம் - 4
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

முதலில் பாதாமை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்து, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்து கிளறி பரிமாறினால், மாம்பழ ரப்ரி ரெடி!!!

English summary

Mango Rabri Recipe For Father's Day

Love mangoes? Then, try out this yummy mango rabri recipe for Fathers Day. It is delicious and very yummy. It is a special treat for your handsome dad.
Story first published: Saturday, June 14, 2014, 16:00 [IST]
Desktop Bottom Promotion