For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)

By Maha
|

Ela Ada Recipe
இலை அடை என்பது கேரளாவில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. சொல்லப்போனால் இதனை கொழுக்கட்டை என்றும் சொல்லலாம். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ரெசிபியை வாழை இலையால் செய்வோம். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஈவினிங் ஸ்நாக்ஸ். ஓணம் தினத்தின் போது, இந்த ரெசிபியை செய்து. சாப்பிடுவார்கள். இப்போது இந்த இலை அடையை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!

மாவு செய்ய...

தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் அரிசியை 5-6 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். பின் அதனை கழுவி கிரைண்டரில் போட்டு, 1 கப் தண்ணீரை மட்டு ஊற்றி சற்று கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பின் அரைத்த அந்த மாவை ஒரு வாணலியில் போட்டு, அதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். பின்னர் தண்ணீர் முழுவதும் வற்றியதும், அதனை இறக்கி, சூடு ஆறியதும், கைகளால் ஒரு முறை கிளறவும். பின் ஒரு ஈரத்துணியால் அதனை மூடி வைக்கவும்.

உள்ளே நிரப்ப...

தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் தண்ணீரை விட்டு, வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி விட்டு, மறுபடியும், அந்த நீரை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் தூள், நெய் மற்றும் துருவிய தேங்காய் போட்டு, தண்ணீர் சற்று வற்றும் வரை கிளறவும்.

பின்னர் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதனை வாழை இலையின் மீது வைத்து தட்டி, அதன் நடுவில் இந்த தேங்காய் கலவையை வைத்து, முனைகளை நன்கு மூடி, வாழை இலையால் அதனை மடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.

பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உள்ள இட்லித் தட்டின் மீது, மடித்து வைத்திருக்கும் இலை அடையை வைக்கவும். பின் அதனை மூடி 5 நிமிடம் கழித்து, இறக்கவும்.

இப்போது சுவையான இலை அடை ரெடி!!!

English summary

kerala special ela/ila ada | சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)

Ila ada/Ela ada is a traditional Kerala dish made with rice flour, coconut-jaggery filling and then steamed wrapped in banana leaf. It is a very healthy and tasty dish which can be had as an evening snack. The ingredients used to prepare this dish are the same as used for sweet kozhukattai but the method of preparation is different.
Desktop Bottom Promotion