For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடி அமாவாசை ஸ்பெஷல்: பாசுந்தி

By Maha
|

பாசுந்தி என்பது பாயாசம் போன்றது. இது மாலை வேளையில் சாமி கும்பிடும் போது, கடவுளுக்கு படைக்க ஏற்றது. அதிலும் இன்று ஆடி அமாவாசை அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது மகாராஷ்டிராவில் பிரபலமான பாயாசம் போன்ற பாசுந்தியை செய்து படைக்கலாம்.

மேலும் பாசுந்தியானது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த பாசுந்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Basundi: Special Sweet Recipe For Aadi Amavasya

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் 1/2 லிட்டர் பால் சேர்த்து நன்கு கிளறி, பின் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.

அரிசியானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது நன்கு கெட்டியாக இருந்தால், அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இறக்கி வைத்துள்ள கலவையில் சேர்த்து கிளறினால், பாசுந்தி ரெடி!!!

English summary

Basundi: Special Sweet Recipe For Aadi Amavasya

Basundi is a special sweet recipe for aadi amavasya which is very similar to kheer. This indian dessert recipe hails from the state of Maharashtra. 
Story first published: Saturday, July 26, 2014, 16:44 [IST]
Desktop Bottom Promotion