Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உருளைக்கிழங்கு அல்வா
மகா சிவராத்திரி வரப்போகிறது. அனைவரும் விரதம் இருப்பதற்கு தயாராக இருப்போம். ஆனால் சிவராத்திரி விரதமானது மற்ற விரதத்தைப் போன்று எதையும் சாப்பிடாமல் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த விரதத்தின் போது நாள் முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் இருக்க வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் சக்தியுடன் இருப்பதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ளலாம்.
அதிலும் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தாமல் ஒருவேளை சமைத்து சாப்பிடலாம். ஏன் இனிப்புக்களை கூட சமைத்து கடவுளுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம். அந்த வகையில் சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் செய்து சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு அல்வா உள்ளது. இது மிகவும் ஈஸியானதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 8-9
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் - 1 கையளவு
பிஸ்தா - 2-3
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அப்படி வதக்கும் போது, நெய் குறைவாக இருந்தால், சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications